ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். சசிகலாவுக்கு போட்டியாக களமிறங்குவாரா தீபா?
- IndiaGlitz, [Friday,December 09 2016]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தொகுதியில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் கட்சிக்குள் இருக்கும் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் அவர் போட்டியிடுவதை விரும்பவில்லை. இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதா போன்ற கண்டிப்பானவர், கட்டுகோப்பானவர் என்பதால் தீபாதான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுவதாக தெரிகிறது.
ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது அவரை பார்க்க தன்னை அனுமதிக்காததால் கடும் அதிருப்தியில் உள்ள தீபா, ஆர்.கே. நகரில் சசிகலா போட்டியிட்டால் அவருக்கு எதிராக நிச்சயம் களமிறங்குவார் என்றே கூறப்படுகிறது. ஆனால் மக்களின் தீர்ப்பு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆரின் சொந்த மனைவியையே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழியையும், அண்ணன் மகளையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.