ஜனாதிபதி, பிரதமர், ராகுல் காந்திக்கு சசிகலா எழுதிய திடீர் கடிதம்
- IndiaGlitz, [Tuesday,December 20 2016]
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, பாரத பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக குடியரசு தலைவர் வந்த விமானம் பழுதடைந்த போதிலும் டெல்லி திரும்பி மீண்டும் சென்னை வந்து தனது தோழிக்கு அஞ்சலி செலுத்தியதற்கு மிக்க நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்
பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா மறைந்த தினத்தில் பிரதமர் நேரில் தன்னை சந்தித்து ஆறுதல் அளித்தது பெருந்தன்மையான செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக விரைவில் சசிகலா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சசிகலாவின் இந்த நன்றி கடிதங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.