போயஸ் கார்டனை விட்டு வெளியேறுகிறாரா சசிகலா?

  • IndiaGlitz, [Tuesday,December 13 2016]

அம்மா என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட செல்வி ஜெ ஜெயலலிதா மறைவிற்கு பின் பல சர்ச்சைகள் அவருடைய உடன் பிறவா சகோதரி சசிகலாவை சுற்றிய வண்ணம் இருக்கின்றன. முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் கட்சியின் பொது செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இதேனிடையே அதிமுகவின் பலர் அம்மா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு ஒரு அவரை பற்றி பறை சாற்றும் ஒரு அருங்காட்சியகமாக வேண்டும் என்றும் அவரால் விரட்டி அடிக்கப்பட்ட சசிகலாவின் சொந்தக்காரர்கள் அங்கேய் தங்க கூடாது எனவும் கோஷம் போட்டு வருகின்றனர். நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவலின்படி சசிகலா விரைவில் போயஸ் கார்டனை விட்டு வெளியேறி அருங்காட்சியாகம் அமைக்க வழி செய்ய இருப்பதாக தெரிகின்றது. ஜெயலலிதாவின் மற்ற சொத்துக்களை அவரின் அண்ணன் மகன் தீபக்கிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்திருப்பதாக சொல்ல படுகிறது. இதை கூட சிலர் கட்சியின் தலைமையை கைப்பற்ற வகுத்த வியூகம் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

More News

இரங்கல் கூட்டத்தில் 'அம்மா' பாடல் பாடிய வடிவேலு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை நடிகர் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம் ஒன்று சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

தல அஜித்துக்காக 7 வருடங்களுக்கு ரீஎண்ட்ரி ஆகும் பிரபல பாடகர்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு திரையுலகினர்களும், அரசியல்வாதிகளும், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களும் அனைத்துக்கும் மேலாக அவருடைய கோடானு கோடி ரசிகர்களும் காலை முதல் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

ஜெயலலிதா குறித்து யுவனின் தைரியமான கருத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் நிரப்ப முடியாது என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்திருந்த போதிலும் தங்களுடைய பணம், பதவியை காப்பாற்றி கொள்வதற்காக அவருடைய இடத்தை பிடிக்க ஒருசிலர் முயன்று வருகின்றனர்.

'பைரவா' இசை வெளியீடு குறித்து முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.