சசிகலாவுக்கு வழங்கப்பட்ட புதிய புரட்சி பட்டம்
- IndiaGlitz, [Saturday,December 31 2016]
புரட்சித்தலைவர் என்ற பட்டம் எம்.ஜி.ஆருக்கும், புரட்சி தலைவி என்ற பட்டம் ஜெயலலிதாவுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் அகில உலக விளையாட்டு ரசிகர்கள் சங்கம் தற்போது சசிகலாவுக்கு புரட்சி மகள் என்ற பட்டத்தை வழங்கியது. இதுகுறித்து அகில உலக விளையாட்டு ரசிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.பழனிவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முன்னாள் முதல்வர் பாரத மகள் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு 1990ஆம் ஆண்டு பாரத மகள் பட்டம் வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்தியாவின் இரும்பு பெண் என்ற பட்டத்தையும் 500 கோடி விளையாட்டு ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்டது என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.
தமிழக முன்னாள் முதல்வர்கள் விளையாட்டுத் துறைக்கு பல சேவை செய்து உள்ளனர். புரட்சி தலைவர், புரட்சி தலைவி இவர்களிடம் அன்பு மகளாக காட்சி அளிக்கிறார். அத்தனைக்கும் மேலாக ஆற்றல் அறிவு பணிவு துணிவு அனைத்தும் ஒரு வெற்றி வீராங்கனைக்கு உள்ள அம்சம் இருப்பதால் சசிகலா அவர்களுக்கு 'புரட்சி மகள்' பட்டத்தை வழங்குகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.