சசிகலாவை நீக்கும் விவகாரம்: அமைச்சர்கள் மிரட்டலால் திடீரென பின்வாங்கிய ஓபிஎஸ்-ஈபிஎஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக பொதுகுழு இன்று காலை கூடிய நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதாக ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டது
இதனையடுத்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சசிகலாவை நீக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் இதற்கு ஒருசில அமைச்சர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினால் ராஜினாமா செய்வதாக ஒருசில அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் மிரட்டியதாக கூறப்படுகிறது
இதன் காரணமாக பொதுச்செயலர் நியமனம் மட்டும் தற்போது ரத்து செய்யப்படுவதாகவும், அமைச்சர்களையும் எம்.எல்.ஏக்களளயும் சமாதானப்படுத்திய பின்னர் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com