சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 16ஆம் தேதி உடல்நலக்கோளாறு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சசிகலாவின் கணவர் நடராஜன் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடராஜனுக்கு திடீரென மார்ச் 17ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவரது உடல்நிலை குறித்து வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று கேட்டறிந்தனர்
இந்த நிலையில் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை கடந்த இரண்டு நாட்களாக அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் இன்று நள்ளிரவு 1.35 மணியளவில் அவர் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
நடராஜனின் உடல் இன்று காலை எம்பாமிங் செய்யப்படவுள்ளதாகவும், இதனையடுத்து அவரது உடல் சென்னையில் உள்ள அவரது பெசண்ட் நகர் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாகவும், அதன்பின்னர் தஞ்சை அருகே உள்ள அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com