ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உண்ணாவிரதமா? சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழகத்தை ஆட்சி செய்வது யார் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஆளுனர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளார். நேற்று அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக எம்.எல்.ஏக்களை சிறை வைத்து ஆளுனர் அழைப்பார் என்று காத்திருந்த சசிகலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மேலும் தன் கைவசம் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் அணி மாறி வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் கூவத்தூருக்கு நேரடியாக சென்று எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்து வரும் சசிகலா, சென்னை திரும்பியவுடன் ஆளுனர் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காவிட்டால் சென்னை மெரீனாவில் ஜெயலலிதா சமாதி அருகே உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக அதிமுக தரப்பினர் கூறுகின்றனர்.

ஏற்கனவே சென்னையில் வன்முறை ஏற்படலாம் என உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையின் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு முக்கிய இடங்களில் போடப்பட்டுள்ள நிலையில், சசிகலா உண்ணாவிரதம் இருக்கவிருப்பதாக வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி. ஆளுனரை சந்திக்கின்றாரா?

தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை வந்துள்ளார்...

ஆளுனர் மாளிகையை சுற்றி திடீர் போலீஸ் குவிப்பு

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவருடன் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்...

அதிமுகவை உடைக்க சதி நடக்கிறது. விஜயசாந்தி பேட்டி

பிரபல நடிகையும் தெலுங்கு மாநிலத்தின் அரசியல்வாதியுமான நடிகை விஜயசாந்தி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐதராபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஓபிஎஸ் அணியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்?

தமிழக அரசியல் சதுரங்க விளையாட்டு உச்சகட்டத்தில் உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருகிறது என்பது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு? புதிய தகவல்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா அணிக்கு 130 எம்.எல்.ஏக்களும், முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு 4 எம்.எல்.ஏக்களும் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.