சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்: கணவர் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்.
Send us your feedback to audioarticles@vaarta.com
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜன் இன்று காலை உடல்நலக்கோளாறால் மரணம் அடைந்ததை அடுத்து தனக்கு 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் இன்று காலை விண்ணப்பம் செய்திருந்தார்.
அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு 15 நாட்கள் பரோலை பெங்களூர் சிறை நிர்வாகம் சற்றுமுன் வழங்கியுள்ளது. இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடராஜனின் உடலை நல்லடக்கம் செய்ய தஞ்சை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால் சசிகலா சென்னைக்கு வருவாரா? அல்லது நேராக இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு செல்வாரா? என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com