ராஜதந்திரம் அனைத்தும் வீணா பேச்சா? சசிகலா விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி செக்!
- IndiaGlitz, [Friday,February 12 2021]
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தமிழக அரசியல் களத்தை மாற்றி விடுவார், அதிமுக கட்சியில் பிளவுகளை ஏற்படுத்துவார் எனப் பல கருத்துக் கணிப்புகளும் விமர்சனங்களும் கூறப்பட்டன. இந்நிலையில் சசிகலாவின் வருகையை தமிழக முதல்வர் மிக சாதுர்யமாக கையாண்டார் எனவும் தனது அதிரயான நடவடிக்கையால் கட்சிக்குள் ஒற்றுமை மனப்பாங்கை வளர்த்து வருகிறார் எனவும் அரசியல் நோக்கர்களே தற்போது அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் களத்தில் தனது ஆளுமைய காட்டிவரும் தமிழக முதல்வரின் நடவடிக்கையால், ஒட்டுமொத்த அமைச்சர்களும் தற்போது எடப்பாடி பழனிசாமியின் அணியிலேயே பக்க பலமாக நிற்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் தொடர்ந்து சசிகலாவிற்கும் தினகரனுக்கும் எதிரான கருத்துகளை ஊடகங்கள் மத்தியில் வெளிப்படையாக முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது ஓ.எஸ். மணியன் போன்ற மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்களும் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா குறித்து பேசிய தமிழக முதல்வர் “தினகரனை நம்பி செயல்படுபவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டி வரும்” என்றும் முன்னதாக அதிமுகவில் இருந்து வெளியேறிய 18 எம்.எல்.ஏக்கள் தற்போது தங்களது பதவிகளை இழந்து வருத்தம் தெரிவித்து வருவதைக் குறித்தும் தமிழக முதல்வர் எடுத்துக் காட்டி இருக்கிறார். மேலும் தமிழக முதல்வரின் சாதுர்யமான நடவடிக்கை மற்றும் செயல்திட்டங்கள் போன்றவை அதிமுகவில் ஒற்றுமையை நிலைநிறுத்தும் என்றும் சில அரசியல் நிபுணர்கள் பாராட்டி வருகின்றனர்.