'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் 'சசிகலா' வசனத்தை இணைத்த விக்னேஷ்சிவன்
- IndiaGlitz, [Friday,January 12 2018]
சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஊடகங்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் முதல் காட்சி முதல் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருவதால் இந்த படம் இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக கருதப்படுகிறது
இந்த நிலையில் இந்த படம் இந்தியில் வெளியான 'ஸ்பெஷல் 26' என்ற படத்தை அப்படியே ரீமேகி செய்யாமல் தமிழுக்கு ஏற்றவகையிலும் திரைக்கதையை வித்தியாசப்படுத்தியுள்ள விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த படம் 20 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் படமாக இருந்தாலும் தற்கால நிஜ நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பையும் படத்தில் புத்திசாலித்தனமாக விக்னேஷ் சிவன் இணைத்துள்ளார்.
குறிப்பாக போலி சிபிஐ அதிகாரியான சூர்யா, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய இண்டர்வியூ செய்யும்போது ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்பார். அப்போது ஒரு பெண்ணிடம் 'நீங்கள் சிபிஐ வேலையில் சேர ஏன் விரும்புகிறீர்கள்? என்று கேட்பார். அதற்கு அவர் 'நாட்டில் ஊழல்களை ஒழிக்கவே இந்த வேலைக்கு வந்ததாக கூறுவார். அப்போது உங்கள் பெயர் என்ன? என்று கேட்டபோது அவர் , 'சசிகலா' என்று கூறுவார். இந்த காட்சியின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்ட பார்வையாளர்களின் சிரிப்பொலியால் திரையரங்கு அதிர்கிறது. அதேபோல் CBI என்பதன் விரிவாக்கம் என்ன என்ற கேள்விக்கு அந்த இண்டர்வியூவில் வந்த பலர் செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்று பதிலளித்தபோதும் பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பொலி அடங்க பல நிமிடங்கள் ஆயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.