ஓபிஎஸ் அதிரடியை தொடர்ந்து அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மக்களும் தொண்டர்களும் விரும்பும் ஒருவர்தான் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக போராடுவேன் என்று அதிரடியாக பேட்டி அளித்தார். மேலும் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அதிரடி பேட்டியை தொடர்ந்து அமைச்சர்களை அழைத்து சசிகலா அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அமைச்சர்கள் எடப்பாடி பழநிச்சாமி, செல்லூர் ராஜூ, உள்பட முக்கிய அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com