4 ஆண்டுகளுக்கு பின் நடந்த சந்திப்பு: ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினார் சசிகலா!
- IndiaGlitz, [Wednesday,September 01 2021]
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் காலமான நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் அவருடைய மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மறைந்த விஜலட்சுமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, ஓபிஎஸ் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். இதேபோல் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கருத்துவேறுபாடு காரணமாக ஓபிஎஸ் அவர்களை சந்திக்காமல் இருந்த சசிகலா, நேரில் வந்து ஓபிஎஸ் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட பலர் ஓபிஎஸ் அவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் ஓபிஎஸ் மனைவி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருந்த கவிஞர் வைரமுத்துவும் நேரில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.