close
Choose your channels

சசிகலாவை பெங்களூரில் இருந்து அழைத்து வந்த டிரைவர் யார் தெரியுமா?

Tuesday, February 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பும் வழியில் பல இடங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அதிமுக கொடியுடன் கூடிய காரில் சசிகலா வந்ததால் அவரது கார் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டது என்பதும், அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் சசிகலா அதிமுக உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான காரில் சென்னை திரும்பினார் என்பதும் அந்த காரிலும் அதிமுக கொடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு சசிகலாவை காரில் அழைத்து வந்த டிரைவர் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சசிகலாவை பெங்களூரில் இருந்து பாதுகாப்பாக காரில் அழைத்து வந்த டிரைவரின் பெயர் பிரபு என்றும், அவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிட்டத்தட்ட 22 மணி நேரம் கார் ஓட்டி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 25 ஆண்டுகளாக டிரைவராக இருந்தவர் என்பதும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் சசிகலாவுக்கு டிரைவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை வரும் சசிகலாவை பத்திரமாக காரில் பெங்களூரிலிருந்து அழைத்து வந்தவர் இவர்தான் என்ற வகையில் டிரைவர் பிரபுவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment