நான் அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை யாரும் நீக்க முடியாது. ஓபிஎஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.
இதுகுறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓபிஎஸ் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியபோது, "நான் அதிமுக கட்சியின் அடிமட்டத் தொண்டன். அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை நீக்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை.
எனது மடியில் கனம் இல்லை. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினைப் பார்த்து சிரிப்பது குற்றமாகாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்னை அதிமுகவின் பொருளாளராக நியமித்தார். அவரது மன நிறைவுக்கு ஏற்ப பணியாற்றி உள்ளேன். அந்தப் பதவியில் என்னை நீக்க யாருக்கும் உரிமையில்லை. நான் அம்மாவின் தீவிரமான தொண்டன். என்ன நடக்கப் போகிறது என்பதை சற்று பொறுத்திருந்து பாருங்கள்' என்று கூறியுள்ளார்.
தன்னை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கிய சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் இன்று என்ன அதிரடி நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com