அன்பு அரசியலுக்கு ஆபத்து: சசிகலா வாழ்க்கை வரலாறு திரைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இரண்டு இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கி வரும் நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே உள்ள உறவு, ஜெயில், மன்னார்குடி கேங்ஸ் ஆகியவை இந்த படத்தில் இருக்கும் என்பதை குறிப்பிட்டுள்ள ராம்கோபால் வர்மா, அரசியலில் அன்பு ஆபத்தானது என்ற சப்டைட்டிலையும் தெரிவித்துள்ளார். 'சசிகலா' என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சசிகலா மற்றும் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க நடிகைகளை தேர்வு செய்து வருவதாக தெரிகிறது. இந்த படம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
HAPPY TO ANNOUNCE! ??????COMING VERY SOON! ?????? pic.twitter.com/ZccF4mufNN
— Ram Gopal Varma (@RGVzoomin) March 31, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments