மருத்துவமனையில் நடராஜன் அனுமதி: சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

  • IndiaGlitz, [Sunday,March 18 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவரது கணவர் நடராஜனுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடராஜனுக்கு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரது உடல்நலம் குறித்து வைகோ, திருமாவளவன் உள்பட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் கணவரை பார்க்க பரோல் கேட்டு சசிகலா பார்ப்பன அக்ராஹர சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்துள்ளார். அவரது விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படுமா? என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும். தினகரனின் தனிக்கட்சி உள்பட பல்வேறு பரபரப்பான அரசியல் தமிழகத்தில் நடைபெற்றுவரும் நிலையில் சசிகலா பரோலில் வந்தால் மேலும் பரபரப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.