ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு: சசிகலா வழக்கறிஞர் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ’தர்பார்’ திரைப்படத்தின் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இதனையடுத்து இந்த படம் ரஜினிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என கருதப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் சசிகலாவை மறைமுகமாக தாக்கும் வசனம் இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் ஒரு பரபரப்பான கருத்தை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ’தர்பார்’ திரைப்படத்தில் சசிகலா குறித்த வசனம் இருப்பதாகவும், அந்த குறிப்பிட்ட அந்த வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றும் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் எச்சரித்துள்ளார்

வழக்கறிஞரின் இந்த எச்சரிக்கைக்கு படக்குழுவினர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முருகதாஸ் இயக்கிய முந்தைய திரைப்படமான ‘சர்கார்’ திரைப்படத்திற்கும் இதேபோன்ற எச்சரிக்கைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது

More News

அமித்ஷாவுக்கு செக் வைக்கும் சிவசேனா.. நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை விசாரிக்க தொடங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு..!

நீதிபதி லோயா மரணம் குறித்த வழக்கு மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்படும், இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று மகாராஷ்டிரா அரசு சார்பாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தின் அடுத்தகட்ட வியாபாரம் குறித்த தகவல்!

ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிவதற்கு முன்னரே அந்த படத்தின் கிட்டத்தட்ட மொத்த வியாபாரமும் முடிந்துவிடும் மேஜிக் தளபதி விஜய் படத்திற்கு மட்டுமே நடக்கும் என்பது தெரிந்ததே

'சூரரை போற்று' கதை குறித்த முக்கிய ரகசியத்தை வெளியிட்ட சுதா கொங்காரா

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தின் உருவாக்கிய சூரரைப்போற்று திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே

தோல்வியிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.

நாம் திட்டமிட்டப்படி பல நேரங்களில் எதுவும் சரியாக நடப்பதில்லை. அதனால் தோல்வியைத் தழுவும்  பலரும் தங்களை நொந்து கொள்ளத் தொடங்கி விடுகின்றனர்

எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்.. ஈரானுக்கு தூது விடும் ட்ரம்ப்.

இரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.