ஜல்லிக்கட்டு தடைக்கு யார் காரணம்? கூகுளில் தேடிப்பாருங்கள். மு.க.ஸ்டாலினை விளாசிய சசிகலா

  • IndiaGlitz, [Wednesday,January 04 2017]

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பொங்கல் திருநாள் நெருங்கும்போது, 'ஜல்லிக்கட்டு' அரசியல் நடத்துவது கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வழக்கமாகி வருகிறது. பொங்கல் முடிந்தவுடன் ஜல்லிக்கட்டு பிரச்சனையை மறந்துவிடுவதும் அக்கட்சிகளின் வாடிக்கை.

இந்நிலையில் இந்த வருடமும் கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்டுள்ள நீதிமன்ற தடைய அகற்றி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அதிமுக அரசு மேற்கொள்ளவில்லை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளதாகவும், அந்த உண்மையை மு.க.ஸ்டாலின் மூடி மறைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போது மேற்கொண்ட ஒரு நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும் நிலை வந்தது என்ற உண்மையை மு.க.ஸ்டாலின் மறைத்ததோடு, ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அவர் மூடி மறைப்பதாக குற்றஞ்சாட்டினார்.

"ஜல்லிக்கட்டுக்கு தடை வந்ததற்கான காரணங்கள்'' என்று யார் ஒருவர் கூகுளில் தேடினாலும் பல்லாயிரக்கணக்கில் பக்கம் பக்கமாக உண்மை தகவல்கள் கிடைக்கும் காலம் இது. எனவே, தமிழத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியிலும், உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொள்வதாக சசிகலா தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி. தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கிட்டத்தட்ட ஒரு மினி பொதுத்தேர்தல் போல நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை சற்று முன்னர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...

தயாரிப்பாளர் சங்கத்திடம் வருத்தம் தெரிவித்தார் விஷால். சஸ்பெண்ட் ரத்தாகுமா?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கம்...

ஜோதிகா-நயன்தாரா படங்களை பாராட்டிய ஜிப்ரான்

வளர்ந்து வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா...

சிவாஜி சிலை மட்டும்தான் போக்குவரத்துக்கு இடையூறா? வைகோ

சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்...

சத்யராஜ் குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் இன்னொரு நபர்

சத்யராஜ், அவருடைய மகன் சிபிராஜ் ஆகிய இருவருமே கோலிவுட் திரையுலகில் தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்துள்ள நிலையில்