சசிகுமாரின் அடுத்த இரண்டாம் பாக படம்

  • IndiaGlitz, [Sunday,March 11 2018]

நடிகர் சசிகுமார் ஏற்கனவே 'நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த படம் - சுந்தரபாண்டியன்.சசிக்குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமும் கூட!

சுப்ரமணியபுரம்,ஈசன் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய எஸ்.ஆர்.பிரபாகரனை இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தினார் சசிக்குமார்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குனராக அறியப்பட்ட எஸ்.ஆர்.பிரபாகரன்,தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்,'சத்திரியன்' என தனக்கான அடையாளங்களைப் பதிவு செய்தார்.

சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன் இருவரின் சமூக வலைத்தளங்களில் 'சுந்தரபாண்டியன் கூட்டணி மீண்டும் எப்போது?'என்கிற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு.குறிப்பாக தென்மாவட்ட ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும் போது இருவரிடமும் முன்வைக்கிற கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

அப்படிக் கேள்வி எழுப்பிய ரசிகர்களின் வேண்டுகோள் இப்போது நிறைவேறப்போகிறது என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ்.தற்போது சசிக்குமார், சமுத்திரக்கனி கூட்டணி 'நாடோடிகள் 2' படப்பிடிப்பை மதுரையில் தொடங்கியிருக்கிறார்கள்.இந்தப் படம் முடிந்த கையோடு 'சுந்தரபாண்டியன் 2' படம் தொடங்கும் எனத்தெரிகிறது.

இந்த தகவல் தெரிந்ததும் நான்கைந்து தயாரிப்பாளர்கள் தங்கள் கம்பெனிக்கு படம் பண்ணிக்கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்களாம்.விரைவில் அதிரடியான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

 

More News

சூர்யா, கார்த்திக்கு பின் ரகுல் ப்ரித்திசிங்கின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'NGK' படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடித்து வருகிறார் என்பதும், அதேபோல் கார்த்தி நடிக்கும் 17வது படத்திலும் ரகுல் தான் ஹீரோயின் என்பதும் தெரிந்ததே

'தளபதி' ரசிகராக நடிக்கும் ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்

நடிகர், இசையமைப்பாளர் என இரண்டையும் பேலன்ஸ் செய்து திரையுலகில் வேகமாக முன்னேறி வருபவர் ஜிவி பிரகாஷ். சமீபத்தில் வெளியான 'நாச்சியார்' இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததால் அவர் வெகு உற்சாகமாக உள்ளார்.

வங்கி மோசடியில் சிக்கிய லண்டனில் செட்டிலான தமிழ் நடிகை

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் லோன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்வது தற்போது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.

கிலுஜோசப்: தபால் தலைக்கு தோன்றாத எதிர்ப்பு தாய்ப்பாலுக்கு மட்டும் ஏன்?

மலையாள இதழ் ஒன்றில் நடிகை கிலுஜோசப் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற அட்டைப்படம் வெளியாகியிருந்தது. இந்த புகைப்படத்திற்கு பாராட்டுக்களும், கடுமையான விமர்சனங்களும் மாறி மாறி கிடைத்தன.

அதுக்குள்ள ரெண்டு வருசம் ஆச்சா? விஜே அஞ்சனாவின் ஆச்சரியம்

இன்று விஜே அஞ்சனா தனது இரண்டாவது திருமண நாளை தனது கணவருடன் கொண்டாடி வருகிறார்.கடந்த 2016ஆம் ஆண்டு இதே மார்ச் 10ஆம் தேதிதான் 'கயல்' சந்திரனை கைப்பிடித்தார் அஞ்சனா.