ஜப்பானில் திரையிடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் - ஜிவி பிரகாஷ் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படம் ஜப்பானில் நடைபெறவுள்ள டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். டோக்கியோவில் உள்ள TOHO என்ற திரையரங்கில் அக்டோபர் 28ஆம் தேதியும், அக்டோபர் 30ஆம் தேதியும் திரையிடப்படவுள்ளதாகவும், ஜப்பானில் உள்ள தமிழ் ரசிகர்களும் இசையை விரும்புபவர்களும் இந்த படத்தை பார்க்க தவற வேண்டாம்' என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடிவேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவியாதவ் ஒளிப்பதிவும் அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Fans in Japan, Sarvam Thala Mayam is being screened at the Tokyo Film Festival Catch it at TOHO Cinemas Roppongi Hills on Oct 28th at 18:15 and on Oct 30th at 20:25
— A.R.Rahman (@arrahman) October 26, 2018
Enjoy the story of Peter and his journey into the world of classical music.#sarvamthalamayam
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com