கடல் கடந்த அங்கீகாரம் பெற்ற ஜிவி பிரகாஷ் படம்

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ். நாயகனாக நடிப்பது மட்டுமின்றி அவர் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு இசையும் அமைத்து வருகிறார்

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வம் தாளமயம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஜிவி பிரகாஷின் இசை குரு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் தற்போது ஒரு பெருமையை பெற்றுள்ளது. ஆம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் 31வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்த படத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. கடல் கடந்த அங்கீகாரம் பெற்றுள்ள 'சர்வம் தாளமயம்' படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். ரவி யாதவ் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

More News

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் கமல் பட இயக்குனர்

கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கிய படம் 'பாபநாசம்'. மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்கான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

செல்பி கேட்ட ரசிகர்கள்: குணமா, அன்பா மறுத்த அஜித்

தல அஜித்தின் திரைப்படங்கள் குறித்தும், நடிப்பு குறித்தும் மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் அவருடைய மனிதநேயம் குறித்து அனைவருக்குமே ஒருவித மரியாதை இருப்பது உண்மை.

வைரலாகும் ரஜினியின் முறுக்குமீசை வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தின் செகண்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போஸ்டரில் ரஜினி முறுக்குமீசை தோற்றத்துடன் கள்ளங்கபடம் இல்லாத புன்சிரிப்புடன் தோற்றமளித்தார்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயக்கமில்லை: கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

'பரியேறும் பெருமாள்' படத்திற்கு மு.க.ஸ்டாலின் - உதயநிதி வாழ்த்து

சமீபத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்த நிலையில்