நான் வாசிச்ச பிறகுதான் தளபதி படமே ரிலீஸ் ஆகும்: சர்வம் தாளமயம் டீசர் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் 'சர்வம் தாளமயம்' திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த ஒரு நிமிட 4 வினாடி டீசரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இசை சாம்ராஜ்யமே நடத்தியுள்ளது தெரிகிறது. இசை சம்பந்தப்பட்ட படம் இயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. இயக்குனரும், இசையமைப்பாளரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தால் மட்டுமே அது சாத்தியம். தமிழில் நீண்ட வருடங்களுக்கு பின் வெளிவந்துள்ள ஒரு முழுநீள இசைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'நாச்சியார்' படத்திற்கு பின் ஜிவி பிரகாஷின் நடிப்பில் ஒரு இயல்புத்தன்மையை பார்க்க முடிகிறது. 'நான் எந்த பாட்டு கேட்டாலும் அப்படியே வாசிச்சிருவேன், 'நான் வாசிச்ச பிறகுதான் தளபதி படமே ரிலீஸ் ஆகும்' 'எனக்கு உள்ள கேட்குது சார்...', 'என் உயிர் மனசு, உடலு எல்லாமே தாளமா துடிச்சுகிட்டு இருக்குது' போன்ற வசனங்களை அவர் இயல்பாக பேசியுள்ளது அருமை. இசை சம்பந்தப்பட்ட கதைக்கு ஒரு இசையமைப்பாளரையே நாயகனாக தேர்வு செய்துள்ளது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
ஏற்கனவே இந்த படம் ஒருசில சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படம் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#SarvamThaalaMayam #சர்வம் தாள மயம் Teaser is out now!! Directed by @DirRajivMenon and music by @arrahman.
— A.R.Rahman (@arrahman) November 23, 2018
Click on the links below to check out the teaser!
https://t.co/2AfMEML32H@mindscreencine #JioStudios
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments