இதுவே கடைசி அல்ல… கொரோனா குறித்து மேலும் அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்ட விஞ்ஞானி!!!

 

கொரோனா வைரஸின் தாக்கம் உலகத்தைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த வைரஸின் உருவாக்கத்தைப் பற்றி சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அமெரிக்க அதிபர். ஆனால் கொரோனா வைரஸை மனிதர்கள் உருவாக்கி இருக்க வாய்ப்பே இல்லை என உறுதியாகக் கருத்து வெளியிட்டு இருக்கிறார் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியர் சூசன் வைஸ்.

அதில் கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ்-கோவ்-2 (SARS-coV-2) என்ற கொரோனா வைரஸ் இயற்கையாகவே உருவானதே அன்றி மனிதர்களால் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப் பட்டதல்ல” என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் குறித்த சில நுணுக்கமான ஆய்வுக் கருத்துகளையும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

சென்னையில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் ஒன்று நடத்திய கருத்தரங்களில் கலந்து கொண்டு பேசிய அவர், மேலும் கோவிட்-19 நோயை விளைவிக்கும் சார்ஸ் கோவ்-2 என்ற கொரோனா வைரஸானது பல்வேறு வழிகளில் செல்களில் புகுந்து பெருகுகிறது. அதே நேரம் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து, இந்த வைரஸ் இயற்கையாகத் தோன்றியது என்றுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் மனிதன் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களை இவ்வளவு துல்லியமாகச் சென்றடையக் கூடிய வகையில் குறிப்பிட்ட மாற்றங்களை அடையக் கூடிய நுண்கிருமியை மனிதர்களால் வடிவமைக்க முடியாது. எனவே இந்த வைரஸ் ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், மனிதர்களிடையே பரவி நோய்களை விளைவிக்கும் வைரஸ்களில் சார்ஸ் கோவ்-2 கடைசியாக இருக்க போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார். உலகில் இதுவரை சார்ஸ் கொரோனா வைரஸ் தாக்குதல் 2 முறையும் மெர்ஸ் வைரஸ் தாக்குதல் ஒரு முறையும் நிகழ்ந்துள்ளன. மனித குலத்தின் மீதான அடுத்த வைரஸ் தாக்குதல் சார்ஸ் கொரோனா வைரஸைவிட குறைவான வேகத்தில் பரவக்கூடிய அதிக உயிர்கொல்லித் தன்மை வாய்ந்த மெர்ஸ்-2 (Mers-2) ஆகவும் இருக்கலாம் என அதிர்ச்சி ஏற்படுத்தும் கருத்தை கூறியுள்ளார். இந்தக் கருத்து விஞ்ஞானிகளிடையே மேலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கொரோனா மிஞ்சியதால் 3 வாரங்களுக்கு விடுமுறை… மீண்டும் மூடப்பட்ட பள்ளிகள்!!!

கர்நாடக மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார்.

இங்கிலாந்துக்கான ஒரு நாள் தூதராகத் தேர்வு செய்யப்பட்ட 18 வயது இந்தியச் சிறுமி!!!

சர்வதேச பெண் குழந்தைகளின் தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த கல்லூரி இளம்பெண் இங்கிலாந்து நாட்டுக்கான ஒருநாள் தூதராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

பாஜகவில் குஷ்பு: காங்கிரஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கடந்த சில வாரங்களாக பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வலம் வந்துகொண்டிருந்தன.

எல்லாத்துக்கும் சுந்தர் சி தான் காரணம்: காங்கிரஸ் பிரமுகர் ஆவேசம்

கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, இன்று பாஜகவில் இணையவுள்ளார். இந்த நிலையில் குஷ்புவின் இந்த மாற்றம் குறித்து அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

செய்தி தொடர்பாளர் பதவி பறிப்புக்கு குஷ்புவின் பதிலடி!

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு இன்று மதியம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் முன் பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன