'சார்பாட்டா பரம்பரை' வேம்புலியின் மனைவி இந்த பிரபல தொகுப்பாளினியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மட்டும் வெற்றி படமாக இல்லாமல், அந்த படத்தில் நடித்த அனைவருமே பிரபலமாகும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் வேம்புலி என்ற கேரக்டரில் நடித்த ஜான் கொக்கனை கூறலாம். இவரைப்பற்றி திரையுலகினர் பலரே அறிந்திராத நிலையில் இந்த படம் வெளிவந்த பிறகு தற்போது அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். குறிப்பாக அஜித் குறித்து ஜான் கொக்கன் பதிவு செய்ததை அடுத்து டுவிட்டரில் டிரெண்ட் ஆகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வேம்புலி கேரக்டரில் நடித்த ஜான் கொக்கனின் மனைவி பூஜா ராமச்சந்திரன் ஒரு பிரபல தொகுப்பாளினி என்பது குறிப்பிடத்தக்கது. பூஜா ராமச்சந்திரன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து உள்ளார் என்பதும், பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கடந்த 2019ஆம் ஆண்டு ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்ட இவர் சமூகவலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தின் வேம்புலி கேரக்டர் குறித்து பூஜா ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராமில் கூறியபோது, ‘வேம்புலி கேரக்டரில் ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ஜான் ஒப்பந்தமானதிலிருந்து வேம்புலி கேரக்டராக அவர் மாறிவிட்டார். அவர் இந்த படத்திற்காக கடுமையான வொர்க் அவுட் செய்ததால் தாங்க முடியாத வலியை அனுபவித்ததை நான் அருகில் இருந்து பார்த்து இருக்கின்றேன். இந்த படத்தில் அவர் கையெழுத்து போட்ட போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். பா ரஞ்சித் போன்ற திறமையான இயக்குனருடன் பணிபுரிவது நிச்சயமாக ஒரு நடிகரின் வாழ்க்கையில் மைல்கல் என்று தனது கணவரையும் ‘சார்பாட்டா பரம்பரை படத்தை பாராட்டியும் தனது இன்ஸ்டாகிராமில் பூஜா ராமச்சந்திரன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments