நாகேஷ் நடுவராக 'சார்பாட்டா பரம்பரை' சண்டை: வைரலாகும் பழைய வீடியோ!

சமீபத்தில் வெளியான இயக்குனர் பா ரஞ்சித்தின் ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தில் ‘சார்பாட்டா பரம்பரை மற்றும் இடியாப்பம் பரம்பரை இடையே உள்ள குத்துச்சண்டை போட்டி உள்ளிட்ட பல பிரச்சனைகள் மிகவும் இயல்பாக காட்டப்பட்டு இருந்தது என்பதும், இதனால் இந்த படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 70 களில் வெளிவந்த திரைப்படம் ஒன்றில் நாகேஷ் ‘சார்பாட்டா பரம்பரை மற்றும் இடியாப்பம் பரம்பரை என்று கூறிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தனது அம்மாவுக்கும் இன்னொரு பெண்ணிற்கும் நடக்கும் சண்டையை அவர் ‘சார்பாட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை சண்டையை ஒப்பிட்டு நடுவர் போல் கூறும் நகைச்சுவை காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

மேலும் இந்த சண்டையை உட்கார்ந்து கொண்டு பார்க்க வேண்டுமென்றால் பத்து காசு என்றும் நின்று கொண்டு வரவேண்டும் என்றால் 5 காசுகள் என்றும் நாகேஷ் பணம் வசூலிக்கும் நகைச்சுவை காட்சியும் அதில் உள்ளது. இதில் இருந்து ‘சார்பாட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை குறித்த காட்சிகள் 70 ஆம் ஆண்டிலேயே திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது.