close
Choose your channels

'சார்பட்டா பரம்பரை' திரையரங்குகளில் வெளியிடுவதில் சிக்கலா?

Monday, August 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து ’சார்பட்டா பரம்பரை திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பு இருப்பது என்பது குறித்து கோலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’சார்பட்டா பரம்பரை குழுவினர் இது குறித்து அமேசான் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் இதனால் ’சார்பட்டா பரம்பரை திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஊரடங்கு நேரத்தில் ஓடிடியில் வெளியாகி சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’, த்ரிஷ்யம் 2’ உள்பட ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் அந்த படங்கள் திரையரங்குகள் திறந்த பின்னரும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதேபோல் ’சார்பட்டா பரம்பரை திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லை என்றே திரையுலக வட்டாரங்கள் கூறிவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment