'சார்பாட்டா பரம்பரை' சக்சஸ் மீட்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,August 10 2021]

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் அமேசான் ஓடிடியில் வெளியான திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை’. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் ஒரு சில அரசியல்வாதிகளும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது நன்றியை ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் தெரிவித்தனர். இது குறித்த புகைப்படங்களை இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ஜான் கொக்கன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

இந்த சக்சஸ் மீட்டில் ஆர்யா, ஜான் கொக்கன், சந்தோஷ் நாராயணன், பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ’சார்பாட்டா பரம்பரை படத்தை பார்த்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் படக்குழுவினர்களை நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது தெரிந்ததே.

இந்தநிலையில் ’சார்பாட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் இரண்டாம் பாகத்தில் 1925 ஆம் ஆண்டில் நடந்த குத்துச்சண்டை போட்டிகள் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் பா ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

'ஒரு பொண்ணை தொடனும்ன்னா? சிம்புவின் 'மஹா' படத்தின் அடுத்த டீசர்!

சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவான 'மஹா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே

இணையத்தில் வைரலாகும் ரங்கன் வாத்தியார் மீம்ஸ்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

தமிழிசை செளந்தரராஜனுடன் ஒலிம்பிக் பதக்க மங்கை பிவி சிந்து சந்திப்பு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 

பள்ளிகளுக்கு வரலாம்: தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி அவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்