நியூயார்க் டைம்ஸ் இதழின் பாராட்டை பெற்ற தமிழ் திரைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நியூயார்க் டைம்ஸ் இதழில் பாராட்டைப் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், சந்தோஷ் பிரதாப் உள்பட பலர் நடித்த திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை’. இந்த படம் ஓடிடியில் சமீபத்தில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் ஓடிடியில் வெளியான 5 சிறந்த திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய திரைப்படம் ’சார்பாட்டா பரம்பரை’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்தும் இந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் குறித்தும் நியூயார்க் டைம்ஸ் இதழில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் இதழில் ’சார்பாட்டா பரம்பரை’ படத்துடன் The Awakening of the Ants, All Hands on Deck, His House, Arab Blues ஆகிய படங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
’சார்பாட்டா பரம்பரை திரைப்படம் இதுவரை தமிழக அளவில், தேசிய அளவில் பாராட்டுக்களை குவித்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளதை அடுத்து அந்த படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com