பா ரஞ்சித் படத்தில் மீண்டும் இணையும் 'சார்பாட்டா பரம்பரை' நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில் சூப்பராக நடித்த நடிகர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆந்திராவில் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது ‘சார்பாட்டா பரம்பரை' படத்தில் சூப்பராக நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற பசுபதி இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. விரைவில் பசுபதி இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விக்ரம் மற்றும் பசுபதி இணைந்து ’அருள்’ ’மஜா’, ‘தூள்’, ‘10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் ’பூ’ பார்வதி நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. ஜிவி பிரகாஷ் ஒளிப்பதிவில் கிஷோர் குமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலத்தின் ஒரு பீரியட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments