சார்பாட்டா என்பது சாதி சண்டையா? உண்மையை விளக்கும் பரம்பரை சண்டைக்காரன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் மெட்ராஸ் பாக்சிங் வரலாற்றைக் கூறும் “சார்பாட்டா” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டாலும் இந்தப் படத்தை அணுகுவதில் பலருக்கும் சிக்கல் இருந்து வருகிறது.
அதாவது படம் முழுக்கவே குத்துச் சண்டை வரலாற்றையும் இதற்கிடையே நிகழும் நெகிழ்ச்சியான சம்பவங்களையும் இந்தப் படம் எடுத்துக் காட்டியிருக்கிறது. ராயபுரம் பகுதியில் நிகழும் இந்தக் காட்சிகள் அனைத்தும் மீனவச் சமூக மக்களை மையப்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தப் படத்தில் சமூக அரசியல் குறித்து பேசப்பட்டு இருக்கிறதா? என்பதைப் போன்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து விளக்கி இருக்கும் பிரபல பாக்சிங் வீரர் பக்தவச்சலம் அவர்கள் மெட்ராஸ் பாக்சிங் என்பது சாதிகளுக்கு இடையே நிகழ்ந்த சண்டையல்ல. இது குத்துச் சண்டைக்காக, உண்மையில் தங்களுடைய வலிமையை நிரூபிக்க நடந்த அழகான விளையாட்டு மட்டுமே. இதில் பரம்பரை என்பது சண்டைக்காரர்களை உருவாக்கிய குழுக்களின் பெயர்கள்தானே தவிர அது சாதிப் பெயரல்ல என்பதை விளக்கி இருக்கிறார்.
“சார்பாட்டா“ திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கும் “வேம்புல“ எனும் கதாபாத்திரம் பாக்சர் “பத்தன்“ எனப்படும் பக்தவச்சலத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்ற தகவலும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாக்சர் பக்தவச்சலம் அவர்கள், சார்பாட்டா பரம்பரையை முதலில் யார் உருவாக்கினார்கள்? இந்தப் பரம்பரைக்கு எதிராக தொடர்ந்து பாக்சிங் களத்தில் சண்டையிட்டு வந்த இடியப்ப நாயக்கர் பரம்பரை, எள்ளப்பச் செட்டியார். கிராமினியார் பரம்பரை, சுனாமி கொல்லத்தார் பரம்பரையைப் பற்றியும் தன்னுடைய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வரலாற்று களம் கண்ட மெட்ராஸ் பாக்சிங் வரலாற்றை இந்த நேர்காணல் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com