மிஷ்கின் படத்தில் இணைந்த 'சார்பட்டா பரம்பரை' நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த ’சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடித்த ஆர்யா மட்டுமின்றி பசுபதி, துஷாரா, சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட பலரும் தங்கள் கேரக்டராகவே வாழ்ந்தார்கள் என்பதால் அனைவரும் நடிப்புக்காக பாராட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி இந்த படம் ஆர்யா உள்பட பலருக்கும் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்து வந்த ஆர்யாவுக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அவரை அடுத்து ’சார்பட்டா பரம்பரை படத்தில் ராமன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்த சந்தோஷ் பிரதாப்புக்கும் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது
பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அதன்பின் ஹீரோவாகவும் சின்னச்சின்ன கேரக்டரிலும் நடித்து வந்த சந்தோஷ் பிரதாப், ஒரே ஒரு திருப்புமுனை படத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தார். அந்த திருப்புமுனை படமாக ’சார்பட்டா பரம்பரை’ படம் அவருக்கு கிடைத்துள்ளது.
அந்த வகையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் ’பிசாசு 2’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சந்தோஷ் பிரதாப் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிஷ்கின் படத்தில் நடித்தால் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கும் என்பதால் சந்தோஷ் பிரதாப் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The beginning of #pisasu2@DirectorMysskin #Pisasu2FirstLook@Rockfortent @andrea_jeremiah @kbsriram16 @Lv_Sri @APVMaran #KarthikRaja @shamna_kkasim @Actorsanthosh @actor_ajmal @teamaimpr @PRO_Priya pic.twitter.com/NLHFhURzWm
— Act Santhosh Prathap (@Actorsanthosh) August 3, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments