ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 23' படத்தில் 'சார்பாட்டா பரம்பரை' நடிகர்: சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஸ்கே 23’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் அவ்வப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வரும் நிலையில் மேலும் இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜூ மேனன், சஞ்சய் உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ’சார்பாட்டா பரம்பரை’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த சபீர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’சார்பாட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் கலக்கிய சபீர் அதன் பின்னர் ’நட்சத்திரம் நகர்கிறது' ’கிங் ஆப் கோதா’ ‘தி ரோடு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது 'எஸ்கே 23 ’படத்தில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் இந்த திரைப்படத்தில் யார் யார் எல்லாம் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.