close
Choose your channels

'அஜித் 61' படத்தில் இணைந்த 'சார்பாட்டா பரம்பரை' நடிகர்

Sunday, May 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் நடித்து வரும் ‘அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ‘சார்பாட்டா பரம்பரை' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அஜித் 61’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணாசாலை செட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து வருவதாகவும் மேலும் சிலர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ‘சார்பாட்டா பரம்பரை' படத்தில் வேம்புலி என்ற கேரக்டரில் நடித்த ஜான் கொகேன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ரான் இசையில் உருவாகிவரும் இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment