'பாகுபலி' படத்தில் நடித்தும் என்னை யாருக்கும் தெரியவில்லை: 'சார்பாட்டா பரம்பரை' நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ படத்தில் நடித்தும் என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்றும் ஆனால் என்னை அனைவருக்கும் அடையாளம் காட்டியது ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம்தான் என்றும் அந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ஜான்கொக்கன் நடித்திருந்தார். ஆனால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி அவர் சில தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ’பாகுபலி’ படத்தில் நடிக்கும் தன்னுடைய பெயர் யாருக்கும் தெரியவில்லை என்றும் அப்போதே தன்னுடைய பெயரை அனைவருக்கும் தெரியும் வகையில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று சபதம் செய்ததாகவும், அந்த ஆசை தனக்கு ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தின் மூலம் நிறைவேறியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘சார்பாட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ஜான்கொக்கனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும், தற்போது அவருடைய ஒரிஜினல் பெயரை மறந்துவிட்டு வேம்புலி என்றே பலர் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Nothing is impossible. Never give up. You have one life. Fight for your dreams.
— Highonkokken (@johnkokken1) August 29, 2021
Thank you Rohith Nelson for sharing this picture on Facebook. #actor #actorsjourney #actorslife #nevergiveup #keephustling #onelife #fightforyourdreams #dreambig #dreamscometrue https://t.co/jiCaSBeWCi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com