மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Wednesday,October 05 2016]

குறும்பு, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா. பாயும் புலி உள்பட தமிழ், தெலுங்கும, கன்னடம், இந்தி, மலையாள மொழி படங்களில் நடித்த பிரபல நடிகை நிகிதா, தொழிலதிபர் ஒருவரை இந்த வார இறுதியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரபல தொழிலதிபர் காகன்தீப் அவர்களை நடிகை நிகிதா ஒரு திருமண விழாவில் முதன்முதலாக பார்த்ததாகவும், முதல் பார்வையிலேயே அவரிடம் காதலில் விழுந்ததாகவும் கூறியுள்ள நிகிதா இந்த திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் காதல் திருமணம் என்று கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பின்னரும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும் நடிகை நிகிதா கூறியுள்ளார்.
வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும் இந்த திருமண விழாவில் நிகிதாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

நிர்வாண சர்ச்சை. பத்திரிகையாளரை விளாசிய ராதிகா ஆப்தே

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக இணணயதளங்களில் 'Parched' என்ற பாலிவுட் படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர்களின் படுக்கையறை காட்சிகள் இணையத்தில்...

பவர்பாண்டி' படத்தை பார்த்து பாராட்டிய தனுஷின் குரு

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'பவர்பாண்டி' படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக நடந்து வருகிறது. ...

விஜய் ஆண்டனி எடுத்த மாஸ் நடிகர்களின் முயற்சி

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மாஸ் நடிகர்கள் மட்டுமே இரட்டை வேடம் என்னும் முயற்சியை எடுப்பார்கள். இரண்டு ...

ஒரே தயாரிப்பு நிறுவனத்துக்காக விஜய்-தனுஷ்

ஒரே நேரத்தில் இளையதளபதி விஜய்யின் 'தெறி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' ஆகிய படங்களை தயாரித்து...

இன்று முதல் சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை' ஆரம்பம்

சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்த 'அப்பா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்...