'பேட்ட' படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,December 09 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவனான த்ரிஷாவின் கேரக்டர் 'சரோ' என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் த்ரிஷா, இளமையான ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் சற்றுமுன் வெளியாகியுள்ள ஸ்டில் ஒன்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்டில்லை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நடிகை த்ரிஷா அதில் கூறியதாவது: என்னுடைய வாழ்நாள் கனவு நனவாகிவிட்டது. ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துவிட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

பிரபல பெண் திரைப்பட தயாரிப்பாளர் கைது

அக்சயகுமார் நடித்த 'பேட்மேன்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் பிரர்ண அரோனா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே பாடலில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்-ஜிவி பிரகாஷ்-அனிருத்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இசைப்படமான 'சர்வம் தாளமயம்' திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வருகிறது.

விஜய்சேதுபதியின் '96' பட டைட்டில் '99'; ஆக மாற்றம்

சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படம் '96'. உணர்வுபூர்வமான காதல் திரைப்படமான இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்தது போலவே ரசித்ததால் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அஜித்தின் 'விஸ்வாசம்' மலேசியாவில் இன்று செய்ய போகும் சாதனை

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது

தனுஷ் மகன்களுடன் '2.0' படம் பார்த்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் '2.0'