மீண்டும் விஜய்யுடன் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்?

  • IndiaGlitz, [Wednesday,July 25 2018]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கடந்த ஆண்டு தனது 100வது தயாரிப்பு திரைப்படமாக விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்தது. இந்த படத்திற்கு ஒருசில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எதிர்பார்த்ததைவிட அதிகமாக வசூல் செய்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் படத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் 'சர்கார்' படத்தின் உலகளாவிய ரிலீஸ் உரிமையை பெற இந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த படத்தின் உரிமைக்காக ரூ.100 கோடி தரவும் இந்நிறுவனம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உலகளாவிய ரிலீஸ் உரிமை உள்பட இந்த படத்தின் மொத்த வியாபாரம் சுமார் ரூ.155 கோடியில் இருந்து ரூ.160 கோடி வரை நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இதற்கு முன்னர் இணைந்த 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' ஆகிய இரண்டு படங்களும் வசூல் மழை பொழிந்ததால் இந்த படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மும்தாஜை அழவைத்த ஷாரிக்: பிக்பாஸ் திரைக்கதையில் திடீர் டுவிஸ்ட்

பிக்பாஸ் முதல் பாகம் போல் இரண்டாம் பாகத்தையும் சுவாரஸ்யமாக கொண்டு செல்ல பிக்பாஸ் ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் பல்வேறு முயற்சி செய்தும் 37 நாட்களாக எந்தவித பலன் கிடைக்கவில்லை

ரஜினியை விளம்பரத்திற்காக பயன்படுத்த வேண்டாம்: சென்னை ஐகோர்ட் கண்டனம்

சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயர்களை பயன்படுத்தி விளம்பரம் தேட வேண்டாம் என்று வழக்கு தொடுத்த ஒருவருக்கு சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1983ல் இருந்தே பாலியல் தொல்லை உள்ளது: பழம்பெரும் நடிகை அதிர்ச்சி பேட்டி

கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்தே சினிமாவுலகில் பாலியல் பிரச்சனை இருப்பதாகவும், இல்லை என்று யாரும் கூறமுடியாது என்றும் கூறியுள்ளார்.

'கோலமாவு கோகிலா' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்த நாட்களில் தனுஷ்-சிவகார்த்திகேயன் படங்களின் ரிலீஸ்

தனுஷ் நடித்த '3' படத்தில் காமெடி கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன், இன்று தனுஷூக்கு இணையாக முன்னணி நாயகனாக உயர்ந்துள்ளார்.