'ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல்: 'சர்கார்' டீசர் விமர்சனம்
- IndiaGlitz, [Friday,October 19 2018]
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் இந்த டீசரை வரவேற்க தயாராக உள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இந்த படத்தின் டீசர் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
தளபதி விஜய்யின் அட்டகாசமான எண்ட்ரியின்போது, 'அவன் ஒரு கார்ப்பரேட் மாஸ்டர், எந்த நாட்டுக்கு போனாலும் தன்னை எதிர்க்கிறவங்களை அழிச்சிட்டுத்தான் வெளியில போவான்' என்ற வசனத்துடன் தொடங்குகிறது சர்கார் டீசர்
இன்னிக்கு நான் ஓட்டு போட இந்தியாவுக்கு வந்திருக்கின்றேன், எந்த கம்பெனியையும் விலைக்கு வாங்கவில்லை என்ற வசனத்துடன் விஜய் அறிமுகமாகிறார்
ஆனால் விஜய்யின் ஓட்டை கள்ள ஓட்டு போட்டுட்டாங்க என்ற பின்னணி வசனமும், விஜய்யும் ராதாரவியும் சந்திக்கும் ஆக்ரோஷமான காட்சியும் அதற்கான பின்னணி இசையும் டீசரில் உள்ள மாஸ் காட்சி
இன்னும் ஒரு நாளில் என்னென்ன மாற போகுதுன்னு ஓரமா நின்னு வேடிக்கை பார்றா, ஐ எம் அ கார்ப்பரேட் கிரிமினல் என்ற வசனம் அனேகமாக இண்டர்வெல் வசனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டகாசமான ரஹ்மானின் பின்னணி இசை, பாடல், மற்றும் கலர்புல்லான ஒளிப்பதிவு படத்தை தூக்கி நிறுத்துகிறது.
கீர்த்திசுரேஷின் கியூட், வரலட்சுமியின் அழுத்தமான பார்வை, ஆகியவையே அந்த கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை ஊகிக்க வைக்கின்றது. கடைசியில் 'இதுதான் நம்ம சர்கார்' என்ற வசனம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான வசனமாக இருக்கும். மொத்தத்தில் ஒரு பக்கா ஆக்சன் அரசியல் படம் தீபாவளி விருந்தாக காத்திருக்கின்றது.