'சர்கார்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி திருநாள் அன்று வெளியாகவுள்ளது. மேலும் சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தில் பாடல்கள் நல்ல ஹிட்டாகியதோடு, பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியாகவுள்ளதாக 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே 'மெர்சல்' படத்தின் டீசர் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்காத நிலையில் இந்த சாதனையை 'சர்கார்' படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு , ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.