மூன்று மணி நேரத்தை நெருங்கிய 'சர்கார்' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Monday,October 29 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் குறித்தும் அதன் கதை குறித்தும் சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளிவரவுள்ளதை படக்குழுவினர் உறுதி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் 3 மணி நேரமாக உள்ளது. அதாவது 2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஆகும். இருப்பினும் அழுத்தமான கதை மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்பதால் நீளமான ரன்னிங் படத்திற்கு பாசிட்டிவ்வாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் விஜய்-முருகதாஸ் இணைந்த படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'கத்தி' திரைப்படங்களின் ரன்னிங் டைம் 170 நிமிடங்கள் மற்றும் 161 நிமிடங்கள் என்ற நிலையில் 'சர்கார்' திரைப்படம் 164 நிமிடங்களாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

போலீசார் முன் உடைகளை களைந்த மாடல் அழகி

மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் போலீசார் முன் மாடல் அழகி ஒருவர் உடையை கழட்டி கலாட்டா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் படத்துக்கு மட்டும் தான் எல்லாம் பண்ணுவீங்களா: எச்.ராஜாவை கலாய்த்த ஆடம்ஸ்

விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தின் மீது மட்டும் வழக்கு போடுபவர்கள் சின்ன படத்தின் மீதும் வழக்கு போட்டால் அந்த படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைக்கும் என நடிகர் ஆடம்ஸ் கலாய்த்துள்ளார்

இது ஒரு பச்சைப்படுகொலை! ஜிவி பிரகாஷ் ஆவேசம்

சமீபத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த சாமிவேல்-சின்னப்பொண்ணு. தம்பதியின் 8 வயது மகள் ராஜலட்சுமி என்ற சிறுமியை

'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் நடிகை வரலட்சுமி அதிரடி கருத்து

கடந்த சில நாட்களாக 'சர்கார்' கதைத்திருட்டு விவகாரம் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது.

கமல்-ரஜினி: நடுநிலையாளர்கள் ஓட்டு யாருக்கு? 

அதிமுக, திமுக இல்லாத ஒரு புதிய தலைமை வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான நடுநிலையாளர்கள் உள்ளதால் அவர்களுடைய ஓட்டுக்களை கவரும் வகையில் புதிய தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.