80 நாடுகளில் ரிலீஸ்: புதிய சரித்திரம் படைக்கும் 'சர்கார்'
- IndiaGlitz, [Monday,October 29 2018]
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வழக்கம்போல் பல்வேறு எதிர்ப்புகளை சமாளித்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரமாண்டமான வியாபாரம் கோலிவுட் திரையுலகை ஆச்சரியப்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 'சர்கார்' ரிலீஸ் ஒரு புதிய சரித்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
'சர்கார்' திரைப்படம் ஐந்து கண்டங்கள், எட்டு நாடுகள் மற்றும் ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் ஆகும். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள நிறுவனம், இதுவரை தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகாத நாடுகளிலும், ஏற்கனவே அபூர்வமாக ரிலீஸ் ஆன நாடுகளில் அதிக திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுத்து வருகின்றது. குறிப்பாக இந்த படம் போலந்து, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களும், விஜய் ரசிகர்களும் தீபாவளி தினத்தில் 'சர்கார்' படத்தை பார்த்து மகிழவுள்ளது ஒரு தமிழ் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.