80 நாடுகளில் ரிலீஸ்: புதிய சரித்திரம் படைக்கும் 'சர்கார்'

  • IndiaGlitz, [Monday,October 29 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வழக்கம்போல் பல்வேறு எதிர்ப்புகளை சமாளித்து வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரமாண்டமான வியாபாரம் கோலிவுட் திரையுலகை ஆச்சரியப்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 'சர்கார்' ரிலீஸ் ஒரு புதிய சரித்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சர்கார்' திரைப்படம் ஐந்து கண்டங்கள், எட்டு நாடுகள் மற்றும் ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் ஆகும். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள நிறுவனம், இதுவரை தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகாத நாடுகளிலும், ஏற்கனவே அபூர்வமாக ரிலீஸ் ஆன நாடுகளில் அதிக திரையரங்குகளிலும் ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுத்து வருகின்றது. குறிப்பாக இந்த படம் போலந்து, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களும், விஜய் ரசிகர்களும் தீபாவளி தினத்தில் 'சர்கார்' படத்தை பார்த்து மகிழவுள்ளது ஒரு தமிழ் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கீர்த்திசுரேஷின் 'S' செண்டிமெண்ட் அடுத்த ஆண்டும் தொடருமா?

வரும் தீபாவளி அன்று வெளியாகும் 'சர்கார்' படம் இந்த ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த 7வது படம் ஆகும்.

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை: முரசொலி விளக்கம்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து சமீபத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் ஒரு கட்டுரை வெளிவந்தது.

அன்று ஒரு நாள் ஷில்பா விஜய்சேதூபதியுடன் தியாகராஜன் குமாரராஜா

தமிழ் சினிமாவில் 25 படங்கள் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய்சேதுபதி பெரும்பாலான படங்களில் வித்தியாசமான வேடங்கள் ஏற்று தனது அபார திறமையை நிரூபித்து வருகிறார்.

ஸ்ரீரெட்டியின் அடுத்த அதிரடி! சிக்குகிறாரா முன்னணி நடிகர்?

தெலுங்கு திரையுலகிலும் தமிழ் திரையுலகிலும் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, மீடூ விவகாரத்திற்கு பின்னர் அதிக தைரியத்துடன் தனது குற்றச்சாட்டை தொடர்ந்து வருகிறார்.

நானும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன்: யாஷிகாவின் 'மீடூ' குற்றச்சாட்டு

கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இசைத்துறை உள்பட பல துறைகளில் மீடூ பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வருவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.