'பேட்ட', 'விஸ்வாசம்' புயலிலும் சாதனை செய்யும் 'சர்கார்'

  • IndiaGlitz, [Tuesday,January 29 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்து, உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் பிரான்ஸ் நாட்டில் ஒரு பக்கம் இன்னும் வசூலை குவித்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'சர்கார்' படம் மீண்டும் திரையிடப்பட்டது. படம் வெளியாகி மூன்றே மாதங்களில் மீண்டும் திரையிடப்பட்டும் திரையரங்கு நிரம்பும் அளவுக்கு ரசிகர்கள் குவிந்ததாக பிரான்ஸ் நாட்டில் தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்வி, வசூல் குறித்து தகவல்களை வெளியிடும் EOY ENTERTAINMENT நிறுவனம் தனது சமூக வலைத்தல பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

மேலும் பிரான்ஸ் நாட்டை பொருத்தவரையில் தமிழ்ப்படங்களில் விஜய் படங்களுக்கு மட்டுமே அதிக பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும், தெறி படத்திற்கு 24,827 பார்வையாளர்களும் மெர்சல் படத்திற்கு 32,471 பார்வையாளர்களும், சர்கார் பார்வையாளர்களும் 25,378 பார்வையாளர்களும் வந்திருந்ததாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

 

More News

தமிழ்ப்படத்திற்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அமிதாப்பச்சன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், அந்த படத்திற்கு 'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டது

'தேவ்' சென்சார் தகவல் மற்றும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில்

தூத்துகுடி தொகுதியில் பிரபல நடிகை போட்டியா?

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துகுடி தொகுதி கடந்த சில நாட்களாகவே ஊடகங்களின் கவனத்தை பெற்றுள்ளது.

மம்முட்டியின் அடுத்த படத்தில் இணைந்த சன்னிலியோன்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த 'பேரன்பு' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் 'மதுரராஜா' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அபூர்வமாக அறிவுபூர்வமாக பேசும் ஒருசிலரில் சிம்பு ஒருவர்: பாஜக பிரமுகர்

நடிகர் சிம்பு கடந்த சில நாட்களாக தெரிவித்து வரும் கருத்துக்கள் முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.