இன்று மாலை 6 மணிக்கு தளபதி விஜய்யின் 'புரட்சி' ஆரம்பம்

  • IndiaGlitz, [Sunday,September 30 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல்கள் அவ்வப்போது 'சர்கார் கொண்டாட்டம்' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு வருவது தெரிந்ததே

அந்த வகையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'சிம்டங்காரன்' சிங்கிள் பாடல் வெளியான நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அடுத்த சிங்கிள் பாடலாக 'ஒரு விரல் புரட்சி' என்ற பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'சிம்டங்காரான்' பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் இந்த பாடலை புரட்சி ஏற்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்திருப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்