பாலிவுட் திரையுலகை வியக்க வைத்த 'சர்கார்' பட வியாபாரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதை ஏற்கனவே அறிவோம். இந்த நிலையில் அடுத்த மாதம் 'சர்கார்' படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்லவுள்ளனர்.
இந்த நிலையில் 'சர்கார்' படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது என்பதையும் இந்த படத்தை ரூ.100 கோடிக்கு உலகளாவிய ரிலீஸ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையின் வியாபாரம் மட்டும் ரூ.22 கோடிக்கு ஆகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தென்னிந்திய திரைப்படம் ஒன்றின் தியேட்டர் உரிமை இல்லாமல் வெறும் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை மட்டுமே இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments