'சர்கார்' பட வழக்கில் சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சி இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யபப்ட்டது. இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின்போது வழக்கு தொடுத்தவரின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 'கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தை பார்த்துள்ள நிலையில், இந்த படம் விரோதத்தை தூண்டியதாக எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என்றும் கூறினர்
மேலும் வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால், அவற்றை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திரைப்படத்தை, திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com