ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்
- IndiaGlitz, [Tuesday,November 27 2018]
சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது,. இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்கள் அவமரியாதை செய்யப்படுவதாக அதிமுக அமைச்சர்கள் புகார் கூறியதால் அந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின்போது 'சர்கார் படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசின் தரப்பில் வாதாட்டப்பட்டது.
இதுகுறித்து முருகதாஸ் அவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக அவரது வழக்கறிஞர், நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து இந்த வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது.