'சர்கார்' பேனரை கிழித்த வாலிபர் மர்ம மரணம்: கொலையா? தற்கொலையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்கார் பேனரை கிழித்த வாலிபர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.
சென்னையில் தனியார் கால் டாக்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் 28 வயது வாலிபர் மணிகண்டன் என்பவர் தீபாவளி கொண்டாட தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்கு சென்றார். நேற்று 'சர்கார்' படம் வெளியானதை அடுத்து அங்குள்ள விஜய் ரசிகர்கள் பேனர்களை வைத்திருந்தனர். இந்த பேனர்களை மணிகண்டன் கிழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி விஜய் ரசிகர்கள் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து மணிகண்டனை மீட்ட அவரது உறவினர்கள் ஒரு வீட்டில் பாதுகாப்பாக பூட்டி வைத்தனர். மணிகண்டனை மேலும் தாக்க விஜய் ரசிகர்கள் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிலமணி நேரங்கள் கழித்து வீட்டை திறந்து பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் தொங்கி மரணம் அடைந்திருந்தார். விஜய் ரசிகர்களிடம் அடிவாங்கிய விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பூட்டிய வீட்டை திறந்து மர்ம நபர்கள் கொலை செய்து தூக்கில் தொங்கி விட்டார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout