சர்கார் பேனர் விவகாரம்: தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு

  • IndiaGlitz, [Friday,November 09 2018]

விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் 'சர்கார்' பட பேனர்களை அனுமதியின்றி வைத்ததாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்கார்' பட பேனர்களை காவல்துறை அனுமதியின்றி வைத்தத்தாக கரூர், நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தஞ்சையில் சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக 25 விஜய் ரசிகர்கள் மீதும், நாகையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக 20 விஜய் ரசிகர்கள் மீதும், கரூரில் விஜய் ரசிகர்கள் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக 10 விஜய் ரசிகர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்கள் கைது செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்