'தளபதி 69' படத்தில் 'சர்கார்' நடிகை.. விஜய்யுடன் மீண்டும் மோதலா?

  • IndiaGlitz, [Thursday,November 21 2024]

தளபதி விஜய் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் மமீதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’சர்கார்’ படத்தில் வில்லி கேரக்டரில் நடித்த வரலட்சுமி, ’தளபதி 69’ படத்தில் இணைய இருப்பதாகவும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ’சர்கார்’ படத்தில் விஜய்க்கு அட்டகாசமான வில்லியாக நடித்து அசத்தியிருந்த வரலட்சுமி மீண்டும் அவருக்கு வில்லியாக நடிப்பாரா அல்லது வேறு முக்கிய கேரக்டரில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

’தளபதி 69’ படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கேவிஎன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

புதிய தொடரின் படப்பிடிப்பை தொடங்கிய திருமுருகன்.. 'மெட்டி ஒலி 2' உருவாகிறதா?

'மெட்டி ஒலி' உள்பட பல பிரபலமான தொடர்களை இயக்கிய இயக்குனர் திருமுருகன் அடுத்த தொடருக்கான படப்பிடிப்பை தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த தொடர் 'மெட்டி ஒலி'

ஏஆர் ரகுமான் இசைக்குழுவின் பெண் கலைஞர் விவாகரத்து.. என்ன காரணம்?

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக இன்று காலை அறிவித்த சில மணி நேரத்தில் அவரது இசைக்குழுவில் இருக்கும் பெண் கிதார் கலைஞர்

நயன்தாராவின் திருமண ஆவணப்படம்.. திடீரென வெளியான முக்கிய அறிக்கை..!

நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியின் வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது இந்த ஆவணத்திற்காக திரைப்பட வீடியோக்களை கொடுத்து உதவிய தயாரிப்பாளர்களுக்கு தனது

ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறை !

ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஐயப்பன் விரதம் பற்றிய ஆழமான விளக்கத்தை அளிக்கிறார். விருச்சிக ராசி அதிபதியான ஐயப்பன், 18 படிகள்,

வடசென்னையின் ஞானபூமியில் நடந்த முருகனின் அற்புத திருவிளையாடல் - P.N. பரசுராமன் விவரிக்கிறார்

வடசென்னையின் ஞானபூமியில் நடந்த முருகனின் அற்புத திருவிளையாடல் - P.N. பரசுராமன் விவரிக்கிறார்